டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்க சன் டிவி சீரியல் செய்த காரியம் – அடடே.., இப்படிலாமா செய்வாங்க?

0

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஏகப்பட்ட சீரியல்களில் சிலது மட்டுமே மக்களிடையே அதிக வரவேற்பை பெரும். அந்த வகையில் டாப் லிஸ்டில் இருக்கும் வானத்தை போல சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளது. அண்ணன் – தங்கை பாச போராட்டத்தில் விதியின் விளையாட்டு என்ன என்பதை மையமாக கொண்டு ஆரம்பமான இந்த தொடர் பாசமலர் படத்தையே மிஞ்சிரும்.

இந்த சீரியல் தொடங்கப்பட்ட போது அண்ணன் ரோலில் தமன்குமார் நடித்து வந்த நிலையில் அவர் திடீரென சீரியலை விட்டு விலகினார். அப்படி அவருக்கு பதிலாக சின்ராசு கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகர் ஸ்ரீ. இவர் துணை நடிகராக பல திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமான நடிகர் தான். அதனால் இவர் சின்ராசு ரோலுக்கு கச்சிதமாகவே பொறுந்திவிட்டார்.

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகுமார் தற்போது வெளியிட்ட சண்டை காட்சிகள் மேக்கிங் வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்போதெல்லாம் சின்னத்திரைக்கும் வெள்ளித்திரைக்கும் வித்தியாசமே இல்லாத அளவுக்கு ஒவ்வொரு நடிகர்களும் உயிரை கொடுத்து நடித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் ‘வானத்தை போல’ சீரியல் சண்டை காட்சிகளும் பட ரேஞ்சுக்கு எடுத்துள்ளார்கள். அந்த வீடியோவில் நடிகர் ஸ்ரீயும் பக்கா ஆக்சன் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் வியப்பில் வாயடைத்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here