
தனியார் சேனல்கள் அனைத்தும் தங்களது டிஆர்பியை அதிகப்படுத்த புதுப்புது சீரியல்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அப்படி சன் டிவியில் ஒளிபரப்பாகி தொடர் தான் மிஸ்டர் மனைவி. தற்போது இந்த சீரியல் வானத்தை போல தொடருடன் இணைந்து மெகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஸ்பெஷல் எபிசோடாக டெலிகாஸ்ட்டாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தற்போது இந்த மெகா சங்கமத்தில் அடுத்து வரும் காட்சிகள் பார்த்து ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதாவது ஊர் திருவிழாவை கொண்டாட கிராமத்திற்கு வானத்தை போல சீரியல் குடும்பமும், மிஸ்டர் மனைவி தொடர் குடும்பமும் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அந்த ஊரில் இருக்கும் பெரிய அரண்மனை ஒன்றில் தங்குகின்றனர்.
மேலும் அந்த அரண்மனையில் சூப்பர் ஸ்டார் நடித்த சந்திரமுகி படத்தில் வரும் பேய் அறை போன்று இந்த அரண்மனையிலும் இருக்கிறது. அந்த அறை கதவில் மாந்திரீக கயிறுகள் மற்றும் தகடுகள் பொருத்தப்பட்டு இருந்தது. அதன் அறையை யாரும் திறக்க கூடாது என்று கூறுகின்றனர்.
இனி மகளிருக்கு மாதம் ரூ.2,000., இலவச மின்சாரம் 200 யூனிட்?? இன்பதிர்ச்சி தந்த அரசு!!!
மேலும் சந்திரமுகி படத்தில் அந்த அறைக்குள் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக ஜோதிகாவும் நயன்தாராவும் போனது போல், இதிலும் அஞ்சலி மற்றும் துளசி இருவரும் சேர்ந்து போக பார்க்கின்றனர். தற்போது இது சந்திரமுகி திரைப்படத்தை காப்பி அடித்தது போல இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.