TRP ல் கலக்கி வரும் சன் டிவி சீரியல்கள்.,, ரேட்டிங் லிஸ்ட் வெளியீடு!!

0

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் TRP ரேட்டிங் விவரங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

TRP ரேட்டிங்:

சின்ன திரையில், போட்டி போட்டுக்கொண்டு ஏராளமான சேனல்கள் பலவிதமான ஷோக்களை ஒளிபரப்பி வருகிறது. இருப்பினும் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் கலக்கி வருகிறது. ஏனென்றால் இந்த 2 சேனல்களிலும் ரசிகர்களை கவரும் வண்ணம் காதல், சண்டை உள்ளிட்ட காட்சிகளை சினிமா பாணியில் எடுக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் மனம் கவர்ந்த சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் 42வது வார TRP ரேட்டிங் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் அடிப்படையில் முதல் இடத்தில் 10.56 புள்ளிகளை பெற்று ‘கயல்’ சீரியல் உள்ளது. அடுத்து 10.35 புள்ளிகளை பெற்று ‘சுந்தரி’ சீரியல் 2ம் இடத்தை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து ‘வானத்தை போல’ சீரியல் 9.60 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது. மேலும் ‘கண்ணனான கண்ணனே’ சீரியல் 9.47 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், ‘ரோஜா’ சீரியல் 8.45 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளது. இதை தொடர்ந்து பெண்களின் விருப்பமான சீரியலான ‘எதிர் நீச்சல்’ 8.03 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் இருக்கிறது.

ஆலியா மானசா நடிக்க போற சீரியல் இது தான்…, ஹீரோவும் இவர் தான்.., அதிகாரபூர்வ தகவல்!!

மேலும் 7.57 புள்ளிகளை பெற்று ‘ஆனந்த ராகம்’ சீரியல் 7 வது இடத்திலும், 4.91 புள்ளிகளை பெற்று ‘சன் டிவி செய்திகள்’ 8 வது இடத்திலும் உள்ளன. கடைசி 9வது இடத்தில் 4.50 புள்ளிகளை பெற்று ‘அன்பே வா’ சீரியல் உள்ளன. முதல் இடத்தில் உள்ள கயல் சீரியல் டீமுக்கு இணையவாசிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here