விஜய் டிவியால் பிரபல சீரியலுக்கு வந்த இழப்பு.., 10 வருடங்களுக்கு பிறகு பிரபல நாயகியை களமிறக்கும் சன் டிவி

0
விஜய் டிவியால் பிரபல சீரியலுக்கு வந்த இழப்பு.., 10 வருடங்களுக்கு பிறகு பிரபல நாயகியை களமிறக்கும் சன் டிவி
விஜய் டிவியால் பிரபல சீரியலுக்கு வந்த இழப்பு.., 10 வருடங்களுக்கு பிறகு பிரபல நாயகியை களமிறக்கும் சன் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு எப்போதும் தனி மவுசு இருந்து தான் வருகிறது. ஆனால் அந்த சீரியலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சன் டிவியில் பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் சீரியல் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் மெயின் வில்லியே. அதாவது ஹீரோவோட அம்மா தாங்க. இந்த ஐஸ்வர்யா கேரக்டரில் முதலில் ஆக்டர் சம்யுக்தா நடித்து வந்தார். அதன் பிறகு இவர் சில காரணங்களால் இந்த சீரியலை விட்டு விலகினார்.

அதன் பிறகு இந்த கேரக்டருக்கு ரேகா கிருஷ்ணப்பா கமிட் ஆனார். ஆனால் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரால் ஒரு நேரத்தில் இரண்டு சீரியலில் நடிக்க முடியாததால் இவரும் திருமகள் சீரியலில் இருந்து விலகுகிறார்.

மாபெரும் சாதனையை படைத்த சன் டிவி சீரியல்.., 2 பொண்டாட்டி கதையை வச்சே பெரிய ஆளாகிடீங்களே!!

எனவே இவரின் இடத்தை சரி செய்ய ஆக்டர் ஸ்ரீஜா கால் பதித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகிய பொம்மலாட்டம் சீரியலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here