இனி கார்த்தி நிலைமை மோசம் தான்.., முருகன் மூலம் அனுவிற்கு தெரியவரும் உண்மை?? பரபரப்பின் உச்சத்தில் சுந்தரி சீரியல்!!

0
இனி கார்த்தி நிலைமை மோசம் தான்.., முருகன் மூலம் அனுவிற்கு தெரியவரும் உண்மை?? பரபரப்பின் உச்சத்தில் சுந்தரி சீரியல்!!
இனி கார்த்தி நிலைமை மோசம் தான்.., முருகன் மூலம் அனுவிற்கு தெரியவரும் உண்மை?? பரபரப்பின் உச்சத்தில் சுந்தரி சீரியல்!!

சுந்தரி சீரியலில், கார்த்தி எப்போது முருகன், அனுவிடம் சிக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய ப்ரோமோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சுந்தரி சீரியல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் TRP-ல் முன்னணியில் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக பல ட்விஸ்டுகள் வந்த வண்ணம் உள்ளது. அதாவது சுந்தரியை ஏமாற்றி கார்த்தி செய்யும் பித்தலாட்ட தனம், கார்த்தியின் அம்மாவுக்கு தெரிய வந்துள்ளது. இந்த ட்விஸ்டை பார்வையாளர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து கார்த்தியின் அம்மா, அனு வீட்டிற்கு சென்று ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தி கார்த்தியின் உண்மை முகத்தை அனுவிற்கு புரிய வைப்பார் என்று நினைத்த ஒரு நொடியில், சீரியலின் டைரக்டர் கார்த்திக் அக்கா மூலமாக கதையை மாற்றிவிட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது கார்த்தி அக்கா அவரது அம்மாவுக்கு கால் செய்து, அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி அவரை அனு வீட்டிலிருந்து கிளம்ப வைத்துவிட்டார். இது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த பொய் சொல்வதற்கு முன் கார்த்தி அப்பாவிடமும், அனு-கார்த்தி உறவு பற்றிய விஷத்தை சொல்லிவிட்டனர். இந்த ட்விஸ்ட்டையும் யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் கார்த்திக் அம்மா, சுந்தரி,கிருஷ்ணா ஆகியோர் அப்பாவை பார்க்க சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இவர்களை தொடர்ந்து கார்த்தி அக்கா, அவரது கணவர் முருகன் ஆகியோரும் கார்த்தி அப்பாவை பார்க்க வந்துள்ளனர்.

“ரோஜா சீரியலில்” குவா.,குவா., அரங்கேறும் எதிர்பாராத சம்பவங்கள்.,,முடிவுக்கு வரும் சீரியல்!!

இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் முருகனுக்கு, தனது மாமனாருக்கு நிஜமாவே உடம்பு சரி இல்லையா, ஏதோ சூழ்ச்சி இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இதனால் அவர் அந்த வீட்டு வேலைக்காரரிடம் விசாரிக்கிறார். இதை பார்த்து சுந்தரி அதிர்ச்சி ஆகிவிட்டார், அந்த வேலைக்கார அண்ணா உண்மையை சொல்லிருவாரா? என்று யோசிச்சிட்டு கொண்டு இருந்தார். இதையடுத்து வேலைக்காரர் மூலம் அனைத்து விஷயங்களுக்கும் முருகனுக்கு தெரிய வந்தால், அவர் கண்டிப்பாக அனு வீட்டிற்கு சென்று பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடுவார்.

ஏனென்றால் சுந்தரி அவருக்கு முதல் மகள் அதனால், அவர் யாரை பற்றியும் யோசிக்க மாட்டார். தொடர்ந்து முருகன் மூலம் அனுவுக்கு உண்மை தெரியவந்தால் என்ன நடக்கும் கார்த்தியை வீட்டை விட்டு விரட்டி விடுவாரா? இல்லை சுந்தரியை ஒழித்து கட்ட பிளான் போடுவாரா என்று பல ட்விஸ்ட்டுகளை எதிர் நோக்கி ரசிகர்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here