தன் கணவருடன் நெருக்கமாக இருக்கும் சன் டிவி சுந்தரி சீரியல் நடிகை… சூர்யா,ஜோதிகாவையே மிஞ்சிருவீங்க போல!!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் கேப்ரியெல்லா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் தன்னுடைய கணவரை கட்டியணைத்தபடி உள்ளார்.

சன் டிவியின் டாப் சீரியல்கள் வரிசையில் ஒன்றாக இருக்கும் சீரியல் சுந்தரி. நிற கேலி மற்றும் நடுத்தர குடும்ப பெண்ணிற்கு உண்டான ஆசைகள்,கனவுகள் இவற்றை அடைய போராடும் சுந்தரி என்ற பெண்ணின் கதையை மையமாக கொண்டது சன் டிவியின் சுந்தரி சீரியல். மேலும் இந்த சீரியல் ஒளிபரப்பட்டு கிட்டத்தட்ட 120 நாட்கள் முடிவதற்குள் தமிழில் டாப் சீரியல்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்து உள்ளது.

இந்த சீரியல் நாயகி கேப்ரியெல்லாவுக்கு சுந்தரி சீரியலே சின்னத்திரை சினிமாவின் முதல் அனுபவமாகும். அதாவது இவரின் முதல் டிவி நிகழ்ச்சி விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு. அதன் பின்னர் அவருக்கு எதிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது அப்லோட் செய்யும் அவரின் வீடியோக்கள் மூலம் தான் இந்த சீரியல் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

மேலும் இவர் இந்த சீரியல் மூலம் எக்கசக்க ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதிலும் இல்லத்தரசிகளே அதிகம். அந்த அளவுக்கு தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் இவர் தன்னுடைய கணவருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here