
சன் டிவியில் போட்டி போட்டுக் கொண்டு ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் கயல், எதிர்நீச்சல், இனியா, போன்ற தொடர்கள் மக்கள் மத்தியில் ஏக போக வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக TRP ல் எதிர்நீச்சல், கயல் சீரியல்தான் முதலிடம் பிடித்து வந்தனர். ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து இறப்புக்கு பின் TRP ல் சரிவை சந்திக்க ஆரம்பித்தது.

அதேபோல் கயல் சீரியலும் TRP ல் பின்னடைவு கண்டு வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் இந்த வாரத்திற்கான TRP ரேட்டிங் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் யாரும் எதிர்பார்க்காத விதமாக வானத்தைப்போல சீரியல் 10.40 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் பிரபல சீரியல்களை பின்னுக்கு தள்ளி உள்ளது. இது மட்டுமல்லாமல் நீண்ட மாதங்களுக்குப் பிறகு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் TRP ல் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.