சன் டிவியில் அதிக சம்பளம் பெறும் நடிகை இவர்தான்., எவ்வளோ வாங்குறாங்கன்னு தெரியுமா?

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், கயல் தொடரில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி  தான் சன் டிவி சீரியல் நடிகைகளிலேயே அதிக சம்பளம் பெறுபவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வைரல் தகவல்:

சீரியல்கள் என்றாலே, சன் மற்றும் விஜய் டிவி தான் என்னும் அளவிற்கு இந்த தொலைக்காட்சிகள்  மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. நாள்தோறும் புது புது சீரியல்கள், இந்த டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் கடந்த வருடம் புதிதாக தொடங்கப்பட்ட  கயல் என்ற தொடர், தொடர்ந்து சன் டிவி டி.ஆர்.பியில் முன்னிலை வகித்து வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த தொடரில் கயல் என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. இவர் இதற்கு முன், ஜீ தமிழ் யாரடி நீ மோகினி சீரியல் வில்லியாக  நடித்தார். இது போக அஜித்தின் வலிமை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் இந்த சீரியலில் ஒரு எபிசோடுக்கு  25,000 முதல் 30,000 வரை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோல், இந்த சீரியலில் எழில் என்ற பாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வரும் சஞ்சீவ் 20,000 சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here