சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நாயகனாக நடித்து வரும் கார்த்தி தனது இரண்டு சீரியல் நாயகிகளுடன் சேர்ந்து ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டோ வைரலாகி வருகிறது.
இரண்டு நாயகிகளுடன் நாயகன்:
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்று சுந்தரி. தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. இந்த தொடரின் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கேப்ரியலா தனது கருப்பான தோற்றத்தை பாசிட்டிவ் ரோலாக மாற்றி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார்.
இந்த தொடரின் நாயகன் கார்த்திக், சுந்தரியை அடுத்து அனு என்ற பெண்ணை காதலித்து ரகசிய திருமணம் செய்து வீட்டுக்கு தெரியாமல் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், இந்த தொடரின் நாயகன் கார்த்திக் இரண்டு நாயகிகள் உடன் இணைந்து சன் டிவியில் நடந்து வரும் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்