
சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். இதில் தன் வீட்டுக்கு மருமகள்களாக வந்த படித்த பெண்களை ஆணாதிக்கத்தால் அரட்டி ஆள்கிறார் ஆதி குணசேகரன். இப்படி தனது வேற லெவல் வில்லத்தனத்தை குணசேகரன் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தி வந்த மாரிமுத்து கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார். இவரின் இறப்பு ஒட்டுமொத்த திரையுலகம், ரசிகர்கள் என அனைவரையும் உலுக்கியிருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் என்னதான் இவர் சினிமாவில் பல வருடங்களாக பணியாற்றி இருந்தாலும் தற்போது தான் இவர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, புகழின் உச்சிக்கு சென்றிருந்தார். இப்படி இருக்கையில் இவரின் திடீர் மரணம் அவர் குடும்பத்தார் மட்டுமல்லாது ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் நேற்றோடு எதிர்நீச்சல் சீரியலில் இவர் நடித்த கடைசி காட்சிகள் நிறைவுக்கு வந்துள்ளது.
அடேங்கப்பா.., வைகை புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!!
இந்நிலையில் நேற்று இந்த சீரியலில் இவர் நடித்த காட்சிகளை சேர்த்து ஒரு வீடியோவாக உருவாக்கி இவருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக அதை மக்களுக்கு ஒளிபரப்பியுள்ளனர். மேலும் தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் மகிழ்வித்து வந்த குணசேகரன் இனி இல்லை என்பது இப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.