சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகை… பாவம் அவங்களும் என்ன பண்ணுவாங்க!!!

0

சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டவர் இல்லம். இந்த சீரியலில் வெள்ளித்திரை பிரபலம் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக வலம் வரும் சோனியா அகர்வால் இந்த நாடகத்தில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

பாரம்பரிய குடும்பத்தின் கதையை மையமாக கொண்டது சன் டிவியின் பாண்டவர் இல்லம் சீரியல். இந்த சீரியலில் பெரிய சுந்தர பாண்டவர் என்ற பெரியவர் பேரன்களான ராஜ சுந்தரம், நல்ல சுந்தரம், அழகு சுந்தரம், அன்பு சுந்தரம், குட்டி சுந்தரம் உள்ளிட்ட  ஐந்து பாண்டவர்கள் திருமணத்தை வெறுக்கின்றனர்.

இந்நிலையில் அவர்களின் கடைசி தம்பியான, குட்டி சுந்தரம் கயல் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ய, அப்படியே கதை மாறி அனைத்து பாண்டவர்களுக்கும் திருமண நடைபெறுகிறது. இந்நிலையில் கடைசியாக நல்ல சுந்தர பாண்டவர்க்கு, கடந்த ஜென்மம் நியாபகத்தில் இருந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த பிறகு அவருக்கு நினைவு வர நல்ல சுந்தரத்தை பிரிய நினைக்கிறார். இவ்வாறு கதை போய்க்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்த சீரியலில் வெள்ளித்திரை பிரபலம் நடிகை சோனியா அகர்வால் இணைய உள்ளார். இவர் புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மதுர, கோவில், காதல் கொண்டேன் உள்ளிட்ட ஒரு சில படங்கள் மூலம்  மக்களுக்கு அறியவந்தவர்.

மேலும் ஓரிரு சீரியல்களிலும் நடித்து உள்ளார். இதையடுத்து இவர் தற்போது சன் டிவியின் பாண்டவர் இல்லம் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். இவரின் இந்த என்ட்ரி சீரியலில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. மேலும் இந்த எபிசொட் வருகிற ஜூலை 1ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் ஒளிபரப்பட உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here