ஹீரோவாக களமிறங்கும் நடிகை ராதிகாவின் மருமகன் – சன் டிவியில் உதயமாகும் புத்தம் புதிய தொடர்!!

0
ஹீரோவாக களமிறங்கும் நடிகை ராதிகாவின் மருமகன் - சன் டிவியில் உதயமாகும் புத்தம் புதிய தொடர்!!

சித்தி2 சீரியலில், நடிகை ராதிகாவின் மருமகனாக  கவின் என்ற பாத்திரத்தில் நடித்த நடிகர் நந்தன் சன் டிவியில் விரைவில் துவங்க உள்ள புதிய சீரியலில் நடிக்க உள்ளார்.

புதிய சீரியல்:

சன் டிவியில் ஒளிபரப்பான, சித்தி 2 என்ற சீரியலில்  நடிகை ராதிகா மருமகனாக கவின் என்ற பாத்திரத்தில் நடித்தவர் நடிகர் நந்தன். தொடர்ந்து இவர் வந்தால் ஸ்ரீதேவி, சித்திரம் பேசுதடி2 உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில், இயக்குனர் பாலுமகேந்திரா உடன் பணியாற்றி வந்த இவர், தற்போது ஷார்ட் பிலிம் மற்றும் சின்னத்திரை தொடர்களில் புகழ் பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார். இதுமட்டுமல்லாமல், வானத்தை போல, திருமகள், அபியும் நானும் உள்ளிட்ட சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

தற்போது சித்தி 2 சீரியலை தொடர்ந்து, புகழ்பெற்ற சரிகம என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்து சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியலில் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த சீரியலின் தலைப்பு மற்றும் கதாநாயகி குறித்து அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here