தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 2ம் வாரத்தில் கோடை விடுமுறை., அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 2ம் வாரத்தில் கோடை விடுமுறை., அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 2ம் வாரத்தில் கோடை விடுமுறை., அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!!

தமிழகத்தில் கோடை காலத்திற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி செல்ஸியசிக்கும் மேலாக பதிவாகுவதால் பொதுமக்கள் வெளியில் சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் 1 முதல் 9 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஏப்ரல் 15ம் தேதி முதல் தேர்வு தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது “உயர் வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்கிய நிலையில் 1 முதல் 9 வரை பயிலும் மாணவர்களுக்கு வழக்கம் போல் ஏப்ரல் மாத கடைசி வரை வகுப்புகள் நடத்த வேண்டும் என எவ்வித கட்டாயமும் இல்லை.

இப்போ மட்டும் இல்ல., விஜய் படத்துலயும் எங்களுக்கு இது தான் நடந்துச்சு., சர்ச்சையில் சிக்கிய ரோகிணி தியேட்டர்!!

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெயில் கொளுத்துவதால் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி ஏப்ரல் 2ம் வாரத்திற்குள் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வினை முடித்து கோடை விடுமுறை வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட வேண்டும்.” என தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கை சூழ்நிலைக்குரியதாக உள்ளதால் இதற்கான தீர்வை அரசு விரைந்து பரிசீலிக்கும் என பெற்றோர் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here