சரும அலற்சியால் ரொம்ப அவதிப்படுறீங்களா? இதோ சிறந்த டிப்ஸ்!!

0
சரும அலற்சியால் ரொம்ப அவதிப்படுறீங்களா? இதோ சிறந்த டிப்ஸ்!!
சரும அலற்சியால் ரொம்ப அவதிப்படுறீங்களா? இதோ சிறந்த டிப்ஸ்!!

கோடை காலமோ, மழை காலமோ நம்மில் பலபேருக்கு சருமத்தில் ஒவ்வாமை ஏற்பட்டு சொறி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் வரும். இதனால் இரவில் கூட தூங்க முடியாமல் அவதிப்படுகிறோம். இதன் விளைவால் தினசரி வேலையை கூட செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறோம். எனவே இந்த பிரச்சனையில் இருந்து விடுபட எளிய வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

டிப்ஸ்:

  • அதிகப்படியான அரிப்பு உள்ளவர்களுக்கு அந்த இடத்தில் அதிகமான எரிச்சல் இருக்கும், எனவே அவர்களுக்கு முதல் தேர்வு சந்தனம் தான். ஏனென்றால் இவற்றில் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை உள்ளது. அதனால் சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து, அரிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வாஷ் செய்தால் அரிப்பு குறையும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

  • தோல் நோய்த்தொற்றுகளுக்கு முதல் எதிரி என்று சொன்னால் அது வேம்பு தான். அதனால் கசப்பு தன்மை உடைய வேப்ப இலைகளை அரைத்து அரிப்பு, சொறி உள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • அடுத்த நிவாரணி தேங்காய் எண்ணெய். இவற்றை ஒவ்வாமை உள்ள இடத்தில் நாள்தோறும் அப்ளை செய்து வந்தால், அந்த சருமம் மிகவும் மென்மையானதாக மாறிவிடும்.
  • சரும அலர்ஜியை துரத்தி அடிக்க நமக்கு கை கொடுக்கும் பொருட்களில் ஒன்று தேன். தினமும் அரிப்பு உள்ள இடத்தில் தேன் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் வாஷ் செய்தால் விரைவில் அலர்ஜி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • ஆன்டி பாக்டீரியல் பண்புகளை கொண்ட, ஆப்பிள் சீடர் வினிகர் சரும அலர்ஜியை விரட்டி அடிக்கும்.

மைக்கை கழட்டிய விக்ரம்., உனக்கு அருகதையே இல்லை என சீறிய அசீம் – பிக் பாஸ் வீட்டில் முத்திய சண்டை!!

  • துளசி இலைகளை பேஸ்ட் ஆக அரைத்து சருமத்தில் தடவி வந்தால் அலற்சி ஓடியே போய்விடும்.
  • பேக்கிங் சோடா சரும அலர்ஜியில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். அதாவது அவற்றை 1 கப் எடுத்து குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் நல்லது.
  • கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து சருமத்தில் அப்ளை செய்து வந்தால் சரும அலர்ஜியில் இருந்து விடுபடலாம்.
  • இறுதியாக, ஐஸ்கட்டி மசாஜ். இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்த செய்யும். அதனால் இவற்றை வாரத்திற்கு 3 முறை செய்து பாருங்கள்.மேல் சொன்ன டிப்ஸ்களை முயற்சி செய்து பாருங்கள், கட்டாயம் சரும ஒவ்வாமையில் இருந்து நாம் விடுபட உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here