தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்களை மாதந்தோறும் வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகைகளின் போது பல சிறப்பு பொருட்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் நவம்பர் 5ம் தேதி நியாய விலை கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி உட்பட இதர பொருட்களை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்றது ஆய்வு கூட்டத்தின் முடிவில் அமைச்சர் சக்கரபாணி ரேஷன் கடை அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் அரிசி மற்றும் இதர பொருட்கள் வழங்குவதற்கான பணியை அதிகாரிகள் துரித படுத்த வேண்டும். மேலும் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் பொருட்கள் சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்த நேரங்களில் அரிசி கடத்துதத்தலை தவிர்க்க வேண்டும். அதற்கு அதிகாரிகள் தான் கவனமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
PM கிசான் திட்ட விவசாயிகளே.., 15 வது தவணை இந்த தேதியில் தான் வரும்.., வெளியான சூப்பர் நியூஸ்!!!