தமிழகத்தில் வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை., ஜாக்பாட் அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை., ஜாக்பாட் அறிவிப்பு!!!
தமிழகத்தில் வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை., ஜாக்பாட் அறிவிப்பு!!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையை மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படித்து வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்க இருப்பதாக கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு – ரூ.300, பிளஸ் 2 மற்றும் பட்ட படிப்பு தேர்ச்சிக்கு- ரூ.400, பட்டதாரிகளுக்கு- ரூ.600 என 3 ஆண்டுகளுக்கு வழங்க உள்ளனர். இந்த உதவித்தொகை பெற விரும்புபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். 40 வயதுக்கு மிகாமல் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வும் உண்டு. இதோடு குடும்ப வருமானம் அதிகபட்சம் ரூ.72,000 இருக்க வேண்டும் என சில தகுதிகளை வரையறுத்து உள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ளதால் பேருந்து, விமான கட்டணங்கள் உயர்வு., டிக்கெட் விலை எவ்ளோன்னு தெரியுமா?

இதேபோல் அரசு உதவித்தொகை பெறாத வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளும் இத்திட்டத்தில் பயனடையலாம். 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்க்கு மாதம் ரூ.600, +2 தேர்ச்சிக்கு ரூ.750, பட்டதாரிக்கு ரூ.1,000 எனவும் 10 ஆண்டு வரை வழங்க உள்ளனர். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here