தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்.., உடனே இத பதிவு செய்யுங்க.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்.., உடனே இத பதிவு செய்யுங்க.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் விவசாயிகளை ஊக்குவிக்குமாறு இலவச மின்சாரம், நவீன தொழில்நுட்பம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் வேளாண் நீர் பாசனத்திற்கு தேவையான மின் மோட்டார் பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பழைய மின் மோட்டார் பம்பு செட் மாற்றுதல் அல்லது புதிய கிணறுக்கு பம்பு செட் அமைப்பது போன்ற செயல்களுக்கு வங்கியில் புதிய மின் மோட்டார் பம்பு செட்க்கு ரூ.10,000 மானியம் இத்திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் நடப்பாண்டில் 5,000 சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என கூறியுள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியால் உணவு தட்டுப்பாடு.., 1 கிலோ கோதுமை மாவு விலை இவ்வளவா?? மல்லுக்கட்டும் பொதுமக்கள்!!!

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வங்கி கணக்கு நகல், புகைப்படம், ஆதார், சாதி சான்றிதழ், சிட்டா, கிணறு விவரம், மின் இணைப்பு, மற்றும் பம்ப்செட் விலைப்பட்டியல் போன்றவற்றை https://mis.aed.tn.gov.in/login என்ற இணையதளத்திலோ உழவன் செயலிலோ பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரம் மற்றும் சந்தேகத்திற்கு வட்டார வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here