2வது பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ரூ.6,000 உதவித்தொகை., ஒரே தவணையா வாங்கிக்கங்க??

0
2வது பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ரூ.6,000 உதவித்தொகை., ஒரே தவணையா வாங்கிக்கங்க??
2வது பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ரூ.6,000 உதவித்தொகை., ஒரே தவணையா வாங்கிக்கங்க??

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனை சரிசெய்ய “பெண் குழந்தை பாதுகாப்பு” திட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வரை வைப்பு நிதியாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து மத்திய அரசும் “பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY)” திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன்படி முதல் பிரசவத்தில் ஆண் அல்லது பெண் குழந்தை பிறந்தால் ரூ.5,000 உதவித்தொகையாக வழங்கப்படும். 2வது பெண் குழந்தை பிறந்தால் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 915 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(10.05.2023) – முழு விவரம் உள்ளே!!

இது தொடர்பாக கேரள பெண் குழந்தைகள் நல இயக்ககம் சார்பில் தெரிவிக்கையில், “கேரளாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க மத்திய அரசின் PMMVY திட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகிறோம். இத்திட்டம் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் மகப்பேறு பலன்களை பெறுபவர்களை தவிர மற்ற அனைவருக்கும் செயல்படும். இதற்கு 2வது பெண் குழந்தை பிறந்து 9 மாதங்களுக்குள் அருகாமையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்ய வேண்டும். http://pmmvy.nic.in என்ற இணையதளத்திலும் நேரடியாக பதிவு செய்யலாம். விண்ணப்பித்தவர்களுக்கு ஒரே தவணையாக குறிப்பிட்ட உதவித்தொகை வழங்கப்படும்.” என தகவல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here