பாபர் அசாமின் சாதனையை முறியடித்த கில்….,தொடரும் WI அணிக்கு எதிரான சாதனை…,

0
பாபர் அசாமின் சாதனையை முறியடித்த கில்....,தொடரும் WI அணிக்கு எதிரான சாதனை...,
பாபர் அசாமின் சாதனையை முறியடித்த கில்....,தொடரும் WI அணிக்கு எதிரான சாதனை...,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலாவதாக டெஸ்ட் தொடரில் வென்ற இந்திய அணி கடந்த சில நாட்களாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர்கள் பல சாதனைகளை முறியடித்தும் வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாமின் சாதனையை முறியடித்திருக்கிறார் இந்திய அணியின் சுப்மான் கில். அதாவது, ஒருநாள் தொடரில் முதல் 26 போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் (1352) என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார் கில். முன்னதாக, பாகிஸ்தானின் பாபர் அசாம் 1322 என்ற ரன்களுடன் முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here