பெரியார் சிலை சர்ச்சை விவகாரம்.., கனல்கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.., உயர்நீதிமன்றம் உத்தரவு!!

0
பெரியார் சிலை சர்ச்சை விவகாரம்.., கனல்கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.., உயர்நீதிமன்றம் உத்தரவு!!
பெரியார் சிலை சர்ச்சை விவகாரம்.., கனல்கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.., உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக இருந்து வருபவர் தான் கனல் கண்ணன். இவர் ரஜினி, அஜித், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஸ்டண்ட் காட்சிகளை அமைத்து கொடுத்துள்ளார். மேலும் இவரும் ரவுடி கெட்டப்களில் பல படங்களிலும் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் சினிமா துறையில் இருப்பது மட்டுமின்றி இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளராக பணியாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுக்குழுவில், கனல் கண்ணன் பேசிய போது, ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

தமிழகத்தில் இவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டுக்கு வாய்ப்பே இல்லை., அரசு திட்டவட்டம்!!

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறை அவர் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் பின்னர் கனல் கண்ணன் ஜாமீன் கேட்டு மனு அளித்தார். தற்போது வரை இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கனல் கண்ணன் மீது நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் வழக்கு கொடுத்து 5 மாதங்கள் ஆன போதிலும் தற்போது வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here