இவர்கள்” இந்திய கல்லூரிகளில் படிப்பை தொடர முடியாது.,, மத்திய அரசு பதில்!!

0
இவர்கள்

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்களை, இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசு திட்டவட்டம்:

ரஷ்யா-உக்ரைன் இடையான போரின் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற 20,000 இந்திய மாணவர்கள், நாடு திரும்பினர். மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தற்போது வரை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக மீண்டும் உக்ரைன் நாட்டுக்கு திரும்பி செல்ல வழி இல்லை, இதனால் இந்தியாவில் தங்கள் மருத்துவப் படிப்புகளில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று மத்திய அரசு முக்கிய பதிலை அளித்துள்ளது. அதாவது, ” உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை, இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர, தேசிய மருத்துவ ஆணையச் சட்டப்படி அனுமதி அளிக்க முடியாது. அதாவது நீட் தேர்வில் போதிய மார்க்குகள் எடுக்காமல், உயர் கல்விக்கான அணுகல் உள்ள மாணவர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்கின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எனவே குறைவான தகுதி கொண்ட மாணவர்களை இந்திய நாட்டின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதித்தால், ஏராளமான சட்ட சிக்கல்கள் வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், விதிமுறையில் தளர்வு கொண்டு வருவது மருத்துவக் கல்வியின் தரத்தை பாதிக்கும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here