தமிழகத்தில் உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கவனத்திற்கு.,,பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு!!

0
தமிழகத்தில் உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கவனத்திற்கு.,,பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு!!
தமிழகத்தில் உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கவனத்திற்கு.,,பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் மத்தியில் பெரும் கல்வி இடைவெளி ஏற்பட்டது. இதை சரி செய்யும் பொருட்டு, பள்ளிக்கல்வி துறை பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

முக்கிய உத்தரவு:

தமிழக பள்ளி மாணவர்கள் நலன் கருதி, மாநில திட்ட இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்கர்களுக்கு முக்கிய அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடந்த கல்வியாண்டில் ( 2021-2022) பனிரெண்டாம் வகுப்பு படித்த முடித்த மாணவர்கள் இந்த ஆண்டு (2022-2023) உயர்கல்வியில் சேர்ந்துள்ளார்களா?? இல்லையென்றால், ஏன் அவர்கள் சேரவில்லை என்பதற்கான காரணத்தையும் அறிந்து, அவர்கள் உயர்கல்வியை தொடர்ந்திட தேவையான வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் அடிப்படையில் ஆகஸ்ட் 26, 2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில், தமிழகத்தில் 79.762 மாணவர்களின் விவரங்களில் 8,588 மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கவில்லை என்ற விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தகவலின் படி, உயர்கல்வியில் சேராத அந்த மாணவர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டு உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் மாநிலத் திட்ட இயக்ககத்தில் வாயிலாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மோசமான நிலைமையில் இருக்கு 5,583 பள்ளி கட்டிடங்கள்.., வெளிவந்த ஷாக் நியூஸ்!!

இதையடுத்து உயர்கல்வியில் சேராத மாணவர்களின் EMIS எண் , கல்வி மாவட்டம், மதிப்பெண் விவரம், தொலைப்பேசி எண் உள்ளிட்ட விடுபட்ட விவரங்கள் பள்ளிகளிலிருந்து சேகரித்து வழங்க வேண்டும். மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், இந்த விவரங்கள் சேகரிப்பு பணிக்கு அதிக முன்னுமை கொடுத்து விவரங்களை விரைவில் சேகரித்து உரிய படிவத்தில் மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here