
தமிழகத்தில் பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்தால் மாணவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக, எஸ்.பி ஸ்ரீநாதா எச்சரித்துள்ளார்.
எஸ்.பி எச்சரிக்கை:
தமிழகத்தில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. பஸ்களில் உட்கார இருக்கை இருந்தாலும் அவற்றில் உட்காராமல், படிக்கட்டுகளில் ஒரு காலை தரையில் தேய்த்தபடி செல்வது, ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டு செல்வது, படிக்கட்டில் மொத்தமாக நின்று கொண்டு கத்துவது, தாளம் போட்டுக் கொண்டு செல்வது, இவ்வாறு பயணிகளுக்கு தொந்தரவு தரும் செயல்களில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால் பல வழித்தடங்களில் திடீரென ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்தி விடுகின்றனர். இதனால் ஓட்டுநருக்கும், மாணவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. இது தொடர்பாக மாணவர்களை பல முறை எச்சரித்தாலும், அவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. இந்நிலையில் இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு இல்லை? முடிவிலிருந்து திடீரென பின்வாங்கிய அரசு!!
பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டு சென்றால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுமட்டுமல்லாமல் அவர்களின் ஆசிரியர், பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.