Thursday, March 28, 2024

இந்த கடிதம் இருந்தால் தான் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியும் – கல்வித்துறை உத்தரவு!!

Must Read

சுய விருப்பத்தின் பெயரில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் அப்படி பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் இருந்து அனுமதி கையொப்பம் பெற்று அதனை பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

கொரோனா நோய் அச்சம் காரணமாக நடப்பு கல்வியாண்டு தொடங்கி 4 மாதங்கள் முடிவு பெற்ற நிலையிலும் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்புகளில் தான் பாடங்களை படித்து வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஒரு சாரார் கேட்டுக் கொண்டதால், கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிடப்பட்டது.

புதிதாக பரவும் “கேட் கியூ” வைரஸ் – பீதியில் மக்கள்!!

அதில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்களின் சுயவிருப்பத்தின் பெயரில் பள்ளிகளுக்கு வரலாம் என்று கூறப்பட்டது. அதே போல் பள்ளிகளுக்கு ஆசிரியர்களும் வரலாம் என்றும் சுழற்சி முறையில் வாரத்தில் மூன்று நாட்கள் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் எந்தெந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது.

அனுமதி கடிதம்:

தற்போது பள்ளிகளுக்கு வர விரும்பும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்ற பின் தான் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட வேண்டியது “1.10.2020 முதல் பாடங்கள் தொடர்பான ஆலோசனைகளை பெற அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எனது சுயவிருப்பத்தின் பேரில் எனது மகன்/மகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க முழு மனதுடன் சம்மதம் தெரிவிக்கிறேன்” இது போல் தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

permission letter
permission letter

இதனை மாணவர்கள் தங்கள் பள்ளி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதிரி கடிதத்தின் கீழ் பெற்றோர் கையொப்பம், வீட்டு முகவரி மற்றும் அவர்களது தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ்ஆப் எண் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

“அமலாக்கத்துறை என்னை கைது செய்ததற்கான காரணம் இதுதான்”? டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகீர்!!!

கடந்த 21ஆம் தேதியன்று டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -