தொப்பை கொழுப்பை குறைக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா.., இந்த விஷயங்களை செஞ்சு பாருங்க!!

0
தொப்பை கொழுப்பை குறைக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா.., இந்த விஷயங்களை செஞ்சு பாருங்க!!
தொப்பை கொழுப்பை குறைக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா.., இந்த விஷயங்களை செஞ்சு பாருங்க!!

தற்போதைய உணவு முறை, வாழ்க்கை முறை உள்ளிட்டவைகளால் ஏராளமானோர் தொப்பை கொழுப்பால் அவதிப்படுகின்றனர். இதற்கு நாள் முழுவதும் அமர்ந்தே இருப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இவற்றை குறைக்க பல கடுமையான முயற்சிகளை கையில் எடுத்தும், பலன் கிடைக்காததால் சிலர் முயற்சியை கை விட்டுவிடுகின்றனர். எனவே தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் முதலில் அவசர படாமல் பொறுமையாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 • தினமும் காலையில் வெறு வயிற்றில் வெதுவெதுப்பான நீரை அருந்த வேண்டும். இவை கொழுப்பை குறைக்க உதவும்.
 • வெளியிலோ அல்லது அலுவலகத்திற்கு செல்லும்போதோ லிப்ட் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு
  படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி பழகுங்கள்.
 • இரவு நேரங்களில் நீண்ட நேரம் தூங்காமல் இருந்தால் தொப்பை போடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே 7 to 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.

 • அதிக இனிப்பு பண்டங்கள், அதிக கார்போஹைட்ரேட் உணவு உள்ளிட்டவைகளை தவிர்த்து அதிக புரதம், நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொண்டால் தொப்பை குறையும்
 • நாள்தோறும் 30- 40 நிமிட நடை பயிற்சி கட்டாயம்.
 • தொப்பை குறைய முக்கியமான பயிற்சி, தோப்புக்கரணம் தான். இதை தினசரி போட்டு வாருங்கள் கட்டாயம் தொப்பை குறையும்.
 • தர்பூசணி, பேரிக்காய், ஆகிய நீர் சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிட்டால் தொப்பை குறையும்.
 • தினமும் உணவில் இஞ்சி சேர்த்து கொள்ளுங்கள், அவை கொழுப்புக்களை கரைக்கும்.
 • யோகாசனம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், கால்பந்து, ஸ்குவாட் , டென்னிஸ் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு பாருங்கள் தொப்பை கொழுப்பு கட்டாயம் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here