தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் வணிகம் மற்றும் தொழில் நிறுவனத்திற்கான மின் கட்டணம் இரண்டு முறை உயர்த்தப்பட்டது. இதனால் பல தொழிற்சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலையில்லா திண்டாட்டமும் ஏற்பட்டது. இந்நிலையில் திருப்பூர், கோவை நகரில் உள்ள அனைத்து ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைகள் நவம்பர் 5ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை அடைக்கப்படுவதாக தமிழ்நாடு தொழில் துறை கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
மேலும் இந்த 20 நாட்களும் நூல் விலை ஏற்றம், மின்கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களது போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.