தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்.., அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!!!

0
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்.., அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!!!
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்.., அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!!!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி 2023-24 ஆம் நிதியாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படாததால் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் அரசு ஊழியர்கள் கடந்த மார்ச் 21ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தீர்வு கிடைக்காததால் மீண்டும் இன்று (மார்ச் 28) மாவட்ட வாரியாக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசு சங்கத்தினர் ஈடுபட்டனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த போராட்டத்தில் “அரசு பணியில் பணியாற்றிய 12.5 லட்சம் பேர்களில் 8 லட்சம் பேர் மட்டுமே தற்போது பணிபுரிகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு பிறகு 1,754 காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்ப பட்டுள்ளது. மீதமுள்ள காலிப்பணியிடங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் ஆள் சேர்ப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் அகவிலைப்படி நிலுவை தொகை, ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

யம்மாடி., பார்வையாலையே வசியம் செய்யும் யாஷிகா.., மதிமயங்கி தவிக்கும் இளசுகள்!!

இந்த முறையும் தகுந்த தீர்வு கிடைக்காவிட்டால் ஏப்ரல் 19ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்வோம்.” எனவும் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். இந்த போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட அரசு துறை ஊழியர்கள் பங்கேற்றதால் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here