பொதுவாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் சீனியர் மாணவர்கள் ஜூனியர்களை ராகிங் செய்வது வழக்கம். அந்த வகையில் கோயம்புத்தூர் தனியார் கல்லூரி ஒன்றில் ஜூனியர் மாணவர் ஒருவரிடம் மது அருந்துவதற்கு சீனியர் மாணவர்கள் பணம் கேட்டு கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் தர மறுத்ததால் அவரை அடித்து துன்புறுத்தி ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஏழு பேரை போலீசார் கைது செய்து இருந்தனர்.

இவ்வாறு கல்லூரி வளாகத்தில் ராகிங் நடப்பதை தடுப்பதற்காக கல்லூரி நிர்வாகம் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் விடுதிகளில் மாணவர்கள் ராகிங் செய்யப்படுவதை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் ராகிங்கில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.