Tuesday, April 23, 2024

இந்தியர்களில் 43 சதவீதம் பேர் மனஅழுத்தத்தால் பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி!!

Must Read

கொரோனா கால பொது முடக்கத்தால் இந்தியர்களில் 43 சதவீதம் பேர் மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற ஆய்வு ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பொது முடக்கம்:

உலகத்தில் உள்ள னைவரும் இன்று பயப்படுவது, கொரோனா என்ற அரக்கனுக்கு தான். இன்று உலகில் சுமார் 1 கோடி மக்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு சார்பில் கட்டாய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

மனித இயல்பு:

இதனால், வீட்டில் இருக்காத பலர் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். மனிதர்களை பொறுத்தளவில் சில நாட்களுக்கு தான் வேலை இல்லாமல் இருப்பது சந்தோசம் அளிப்பதாக இருக்கும், கொஞ்ச நாட்களில் மனித முளை அடுத்து என்ன என்று கேள்வி கேட்டு குடைய ஆரம்பிக்கும்,இது படைப்பின் விசித்திரம்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

stress among humans
stress among humans

இன்று நாம் தொடர்ச்சியாக 5 மாதங்கள் பொது முடக்கத்தில் இருந்து உள்ளோம். இன்னும் பொது முடக்கம் நீடிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட்-டெக் செயல்படுத்தப்பட்ட தடுப்பு சுகாதார தளமான GOQii ஆய்வு ஒன்றை நடத்தியது, அதில் அதிர்ச்சிகரமான 43 சதவீத இந்தியர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகி உள்ளது தெரியவந்து உள்ளது.

பொது முடக்கத்தின் விளைவுகள்:

அந்த ஆய்வு சாதாரண மனஅழுத்தம் முதல் தீவிர மனஅழுத்தம் வரை கோடிட்டு காட்டி உள்ளது. அதில் 26 சதவீதம் பேர் மனஅழுத்தத்திலும், 6 சதவீதம் தீவிரமான அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளது தெரியவந்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் – தமிழக அரசு தேர்வு இயக்கம்..!

stress level of indians increased
stress level of indians increased

இந்த மனஅழுத்தத்திற்கு காரணங்களாக வேலையின்மை, பதட்டம், உடல்நிலையை பற்றி கவலை, பொருளாதாரம்,சமூக சூழல் என்றும் மேலும் பல கூறப்பட்டு உள்ளது. அதில் 59 சதவீத மக்கள் இந்த நாட்களில் சில மனதிற்கு பிடித்தமான செயல்கள் செய்ய விருப்பம் உள்ளது என்றும், 39 சதவீதம் எப்போதாவது இந்த உணர்வு வரும் என்றும், 9 சதவீதம் வெகு சில நாட்கள் மாட்டு இப்படி என்றும், 12 சதவீதம் மற்ற நாட்களை போல் தான் இதுவும் என்று தெரிவித்து உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -