‘இது பழி போடுவதற்கான நேரமில்லை’ – ஜார்கண்ட் முதல்வருக்கு ஜெகன்மோகன் அட்வைஸ்!!

0

கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலை குறித்து விவாதிக்க கூடிய கூட்டம் மான் கி பாத் நிகழ்ச்சி போல் உள்ளது என கூறிய ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டுக்கு மக்களின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 ஜெகன்மோகன் ரெட்டி ட்விட்டரில் ஆலோசனை :

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா 2ம் அலையினால் ஜார்கண்டில் 59,532 பேர் பாதிக்கப்பட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்தும் உள்ளனர். மேலும் 3346 பேர் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். அதனால் ஜார்கண்ட், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய நான்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பற்றிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர்.

அதில் பிரதமர் அவர்கள் பேசியது மான் கி பாத் நிகழ்ச்சி போல் இருக்கிறது, மாநிலங்களின் பிரச்சனைகளை பற்றி பேசியிருந்தால் நன்றக இருந்திருக்கும் என அவர் கூறியது மட்டுமல்லாது அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் இதுகுறித்து மக்கள் முதல்வராக வலம் வரும் ஜெகன்மோகன் ரெட்டி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“நான் உங்களிடம் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நமக்குள் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், இதுபோன்ற அரசியலில் ஈடுபடுவது நம் சொந்த தேசத்தை பலவீனப்படுத்தும். ஒரு சகோதரனாக இதை நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில் இது பழிப்போடுவதற்கான நேரமல்ல. தொற்றுநோயை எதிர்த்து போராட ஒன்றிணைந்து, நமது பிரதமரின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய நேரமிது.” என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here