ஸ்ட்ராபெரி மூன் கேள்விப்பட்டு இருக்கீங்களா.. இந்த நாள்ல வானத்துல பாக்கலாம்!!!

0

ஜூன் 24 ஆம் தேதி ஸ்ட்ராபெரி மூன் என்ற பெயரில் வானில் நிலா தோன்றவுள்ளது. அது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஏற்கனவே நாம் சூப்பர் மூன், பிளட் மூன் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். அதாவது சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும்போது முழு நிலவு வழக்கத்தை விட நமக்குச் சற்று நெருக்கமாக இருப்பதால் சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல பிளட் மூன் என்பது சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால், சிவப்பு நிற அலைவரிசை, நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால் ஆரஞ்சு நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இதனை பிளட் மூன் என்பர்.

 

இந்நிலையில் புதிதாக ஸ்ட்ராபெரி மூன் ஜூன் 24 ஆம் தேதி வரவுள்ளது. ஏன் இந்த நிலவு இவ்வாறு அழைக்கப்படுகிறது என்று உங்களில் பல பேருக்கு சந்தேகம் எழலாம். ஏனேனில் பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் நிலநடுக்கோட்டுக்கு மேலே உள்ள நாடுகளில் வெயில் காலம் துவங்கியுள்ளது.வெயில் காலம் என்பதால் ஆண்டு பகல்பொழுது நீளமாக இருக்கும். அந்த நாடுகளில் கோடை காலத்தின் முதலாவது முழு நிலவு ஸ்ட்ராபெரி மூன் என அழைக்கப்படுகிறது.

பிரிட்டன், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் இந்த ஸ்ட்ராபெரி மூன் ரோஸ் மூன் என்று அழைக்கப்படுகிறது. வானில் ஜூன் 24 ஆம் தேதி இந்த ஸ்ட்ராபெரி மூன் தோன்றவுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here