திடீரென அமெரிக்கா செல்லும் ரஜினி.. பாதியில் நிறுத்தப்பட்ட தலைவர் 169 படப்பிடிப்பு! ஷாக்கில் நெல்சன்!

0
திடீரென அமெரிக்கா செல்லும் ரஜினி.. பாதியில் நிறுத்தப்பட்ட தலைவர் 169 படப்பிடிப்பு! ஷாக்கில் நெல்சன்!

ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை பீஸ்ட் திரைப்பட இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

தலைவர் 169:

ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார்.மேலும் இதில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் ஷிவ் ராஜ்குமார், பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா ராய் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்கள் உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

ஆகஸ்ட் மாதம் தலைவர் 169 படத்துக்கான படப்பிடிப்புகள் தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது ரஜினி அவருடைய மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வருவது வழக்கம். இந்நிலையில் ரஜினி அவருடைய வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவருடைய மனைவி மற்றும் மகள் ஐஸ்வர்யாவையும் அமெரிக்கா அழைத்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

அப்போ அது உண்மை தானா.. விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ரகசியத்தை போட்டுடைத்த கீர்த்தி சுரேஷ்!!

இந்த முறை ரஜினி அமெரிக்காவில் உள்ள அவருடைய நெருங்கிய நண்பர்களையும், ரசிகர்களையும் சந்திக்க உள்ளதாகவும் சிறிது காலம் தங்கி ஓய்வு எடுக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின் தலைவர் 169 திரைப்படத்தில் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பீஸ்ட் படம் தோல்வி அடைந்துள்ள நிலையில் தலைவர் 169 படப்பிடிப்பு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதால் இயக்குனர் நெல்சன் வருத்தத்தில் உள்ளாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here