தமிழகத்தில் தரமான பால் மற்றும் பால் பொருட்களை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் வரும் 25ம் தேதி முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் சில்லறை விற்பனை நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஆவின் நிறுவன இயக்குனர் நாளொன்றுக்கு 14.50 லட்சம் லிட்டர் பால் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பச்சை, நீல, ஜமந்தா நிற பால் பாக்கெட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் நலன் மற்றும் அவர்களின் விருப்பத்தை வைத்து தான் பச்சை நிற பால் பாக்கெட் சில்லறை விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து ஆவின் பால் வகைகள் எந்தவித தடையும் இன்றி மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.