
பொதுவாக பெரும்பாலான வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வாதாடும் போது நீதிபதிகளை ‘மைலார்ட்’ மற்றும் ‘யுவர் லார்ட்ஷிப்’ என்று அழைப்பது வழக்கமாக இருந்து வந்தது. இப்படி அழைக்க வேண்டாம் என்று கடந்த 2006ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது வரை அதனை யாரும் கடைபிடிக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஏ.எஸ்.போபண்ணா முன்னிலையில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இதனை தொடர்ந்து அந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தங்களது வாதத்தை முன் வைக்கும் ஒவ்வொரு நொடியும் நீதிபதியை “மை லார்ட்” என்று அழைத்தார். அதற்கு நீதிபதி நரசிம்மா, எத்தனை முறை தான் நீங்கள் மை லார்ட் என்று அழைப்பீர்கள். அந்த வார்த்தையை பயன்படுத்தாமல் அதற்கு பதிலாக சார் என்று நீங்கள் அழைக்கலாமே. அப்படி நீதிபதியை மை லார்ட் என்று அழைப்பதை நீங்கள் நிறுத்தினால், என் சம்பளத்தில் பாதியை உங்களுக்குத் தருகிறேன்’ என அட்வைஸ் ஒன்றை வழங்கினார். இந்த சம்பவம் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.