இந்திய பங்குச் சந்தைகளை பாதித்த கொரோனா வைரஸ்..சரிவுடன் தொடக்கம்!!!

0

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 64 புள்ளிகள் சரிந்து 51,358 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 17 புள்ளிகள் குறைந்து 15,417 புள்ளிகளாகவும் இருந்தன.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மார்ச் காலாண்டின் ஜிடிபி தரவுகள் இன்று மத்திய அரசு வெளியிட உள்ள காரணத்தால் ஏற்கனவே பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பதற்றத்தில் இருந்த நிலையில், இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கின. முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் பங்குகளை விற்றதால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் தொடங்கியதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.

மார்ச் காலாண்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று இருந்த காரணத்தால் வர்த்தகம் மற்றும் வருவாய் பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளானது..இதனால் டிசம்பர் காலாண்டில் உயர்ந்த நாட்டின் பொருளாதாரம் மார்ச் காலாண்டில் மீண்டும் அதிகளவிலான சரிவை அடைந்திருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

எனவே வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 51,358 புள்ளிகளாகவும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 15,417 புள்ளிகளாகவும் இருந்தன.அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.24 காசாக உள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here