ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி அனுமதி நாளையுடன் முடிவடைகிறது – ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி இல்லை!!!

0
ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி அனுமதி நாளையுடன் முடிவடைகிறது - ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி இல்லை!!!
ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி அனுமதி நாளையுடன் முடிவடைகிறது - ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி இல்லை!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இனி ஆக்சிஜன் தயாரிக்க தேவையில்லை. நம்மிடம் போதுமான அளவிற்கு ஆக்சிஜன் இருப்பு உள்ளது. எனவே ஸ்டெர்லைட் அலையை தொடர்ந்து இயக்க தேவையில்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து திறக்க அனுமதி இல்லை…

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் போது மருத்துவமனையில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் அனைவரும் கொரோனா சிகிச்சைக்காக தத்தளித்து வந்தனர். ஆக்சிஜன் இல்லாமல் பெரும் துயரத்திற்கு ஆளாகினர். ஆக்சிஜன் சுத்தமாக இல்லாமல் இருந்த நிலை ஏற்ப்பட்டது. அப்பொழுது தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும். அந்த ஆலையை திறந்தாள் நம் நாட்டிற்கு தேவையான அளவிற்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் இலவசமாக ஆக்சிஜன் வழங்குவதாக வேதாந்தா நிறுவனம் கூறியது. மக்களின் நலனையும், ஆக்சிஜன் தேவை அதிகம் இருப்பதாலும் இதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. பின் ஆக்சிஜன் உற்பத்தியும் மிக விரைவாக செய்யப்பட்டது. இதை கண்காணிக்க 6 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து திறக்க அனுமதி இல்லை...
ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து திறக்க அனுமதி இல்லை…

தயாரித்த ஆக்சிஜன் முழுவதையும் ஒன்றிய அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. ஆக்சிஜன் தயாரிக்கும் கால அவகாசம் வரும் 31 ஆம் தேதி அதாவது நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடியவுள்ளது. இந்த கால அவகாசத்தை இன்னும் 6 மாதங்களுக்கு நீடித்து தருமாறு வேதாந்தா நிறுவனம் கூறியிருந்தது. இந்த மனுவை நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரணை நடந்தது. விசாரணையின்போது ஸ்டெர்லைட் அலையின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகி வாதாடினார்.

ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து திறக்க அனுமதி இல்லை...
ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து திறக்க அனுமதி இல்லை…

அதில் உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் 3 மாதங்கள் மட்டும் இருந்தது. நாளையுடன் முடிவடைய உள்ள இந்த நிலையில் 3வது அலையின் போது ஆக்சிஜன் தேவை இன்னும் அதிகம் இருக்கும் எனவே ஆக்சிஜன் அதிகம் தயாரிக்கவும் ஆக்சிஜன் இருப்பை அதிகரித்து வைத்து கொள்ளலாம் இதனை கருத்தில் கொண்டு இன்னும் 6 மாத காலத்திற்கு ஸ்டெர்லைட் அலையை திறக்க அனுமதி அளிக்குமாறு வாதாடினார். இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்தார், அப்பொழுது தமிழ்நாட்டில் போதுமான அளவிற்கு ஆக்சிஜன் இருப்பு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி அனுமதி நாளையுடன் முடிவடைகிறது
ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி அனுமதி நாளையுடன் முடிவடைகிறது

ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததால் மட்டுமே ஸ்டெர்லைட் அலை திறக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை எனவே ஸ்டெர்லைட் அலையாயி தொடர்ந்து திறக்க அனுமதிக்க வேண்டாம் என்று கூறினார். இதற்கிடையில் இரு தரப்பின் வாதங்களும் முடிவடையாமல் இருந்த காரணத்தினால் இந்த வழக்கை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர். அதுமட்டுமில்லாமல் அதுவரை ஸ்டெர்லைட் அலையில் ஆக்சிஜன் தயாரிப்பது நிறுத்தாமல் தொடர்ந்து தயாரிக்கும் பணிகள் நடக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here