ஸ்டார்ட் மியூசிக்கில் தொகுத்து வழங்கும் மாகாபா ஆனந்த் – அப்படினா பிரியங்கா பிக் பாஸ் போறது உறுதியா??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த ஸ்டார்ட் மியூசிக் மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சி பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஸ்டார்ட் மியூசிக்

விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. கடந்த 2 சீசன்களையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வந்தார். நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை பிரியங்கா கலகலப்பாக தான் வைத்திருப்பார். இவரால் தான் நிகழ்ச்சி சூடுபிடிக்கவே ஆரம்பித்தது.

Start Music - Disney+ Hotstar

சீரியல்களில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு பலரும் கலந்துகொள்ள கலாட்டாக்களுக்கு அளவே இல்லாமல் போனது. பிரியங்காவிற்கு இந்த நிகழ்ச்சி மூலம் அதிக ஆதரவு கிடைத்தது. பிரியங்கா அக்கா என்று ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். இந்நிலையில் ஸ்டார்ட் மியூசிக்கின் அடுத்த சீசன் தொடங்கவுள்ளது.

அது பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஸ்டார்ட் மியூசிக் ஷோ ஷூட்டிங் ஆரம்பித்து விட்டார்களாம். ஆனால் இதனை பிரியங்கா தொகுத்து வழங்கவில்லையாம்.

மா.கா.பா தான் தொகுத்து வழங்கவுள்ளாராம். மேலும் கூடுதல் தகவலாக பாரதி கண்ணம்மா பிரபலங்கள் தான் இதில் முதன்முதலாக கலந்துகொள்ளவுள்ளனர். இதன் மூலம் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல தயாராகி இருப்பது தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here