INDVSAUS.., ஆஸ்திரேலிய அணியில் ஏற்பட்ட குழப்பநிலை.., வெற்றிபெறுமா இந்தியா??

0

மூன்று போட்டிகளை கொண்ட T20 தொடரில் இந்தியாவிற்கு எதிராக விளையாடும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு குறைந்து கொண்டே செல்கிறது.

வாய்ப்பை பயன்படுத்துமா இந்தியா!!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் வரும் 23 ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை சந்திக்க உள்ளது. இதில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி சமாளித்து வெற்றி பெறுவது கேள்விக்குரிய இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் தற்போது நடந்து வரும் சூழ்நிலைகளை பார்த்தால் இந்திய அணி எளிதாக வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள முக்கிய வீரர்களான மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலிய அணியில் இருந்து விலகியது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இவர்களுக்கு பதில் ஆஸ்திரேலிய அணியில் மாற்று வீரர்களாக நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ் மற்றும் சீன் அபோட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் நாதன் எல்லிஸ் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக விளையாட கூடிய திறமையான ஆட்டக்காரர். இந்த மாற்றத்துடன் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை எதிர்கொண்டு வெற்றி பெறுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here