கிங் கோலி பிறந்த நாளில் சச்சின் சாதனை சமன் செய்வாரா?? உலக கோப்பையில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

0
கிங் கோலி பிறந்த நாளில் சச்சின் சாதனை சமன் செய்வாரா?? உலக கோப்பையில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!
கிங் கோலி பிறந்த நாளில் சச்சின் சாதனை சமன் செய்வாரா?? உலக கோப்பையில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில், இந்திய அணியானது இதுவரை விளையாடிய 7 போட்டிகளையும் வென்று நேரடியாக அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி உள்ளது. இருப்பினும், லீக் சுற்றில் தங்களது தொடர் வெற்றியை தக்கவைத்து கொள்ளும் முனைப்பில், நாளை (நவம்பர் 5) பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது.

இதற்கிடையில், இந்தியாவின் சேசிங் மாஸ்டரான விராட் கோலி தனது 35 வது பிறந்த நாளை (நவம்பர் 5) கொண்டாட இருக்கிறார். இவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில், தனது 49 வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை சமன் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமானது விராட் கோலியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வைரலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
விராட் கோலி சர்வதேச அளவில்,
  • டெஸ்ட் – 111 போட்டிகள் – 187 இன்னிங்கிஸ் – 7 இரட்டை சதம் – 29 சதம் – 8676 ரன்கள்
  • ஒருநாள் – 288 போட்டிகள் – 276 இன்னிங்கிஸ் – 48 சதங்கள் – 13525 ரன்கள்
    டி20 – 115 போட்டிகள் – 107 இன்னிங்கிஸ் – ஒரு சதம் – 4008 ரன்கள் என மொத்தமாக சர்வதேச அரங்கில் 26209 ரன்களை குவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here