விமானத்தை தவறவிட்ட நட்சத்திர பேட்ஸ்மேன்., T20 WC இருந்து அதிரடியாக நீக்கம்., இப்படியெல்லாமா சோதனை வரும்!!

0
விமானத்தை தவறவிட்ட நட்சத்திர பேட்ஸ்மேன்., T20 WC இருந்து அதிரடியாக நீக்கம்., இப்படியெல்லாமா சோதனை வரும்!!

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானத்தை தவறவிட்டதால் உலக கோப்பை அணியில் இருந்து நட்சத்திர பேட்ஸ்மேன் நீக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி

T20 உலக கோப்பை தொடர் இம்மாதம் 16ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல தயாராகி கொண்டுள்ளனர். அதன்படி இந்திய அணி கூட 6 ஆம் தேதி ஆஸ்திரேலியா புறப்பட உள்ளது. ஆனால் இவர்களுக்கு முன்னதாகவே வெஸ்ட் அணி பயிற்சி பெற அங்கு கிளம்பிவிட்டனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இவர்களுடன் செல்ல இருந்த அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிம்ரன் ஹெட்மயர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானத்தை தவறிவிட்டார். இதனால் இவர் T20 உலக கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஷிகர் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி., மீண்டும் தொடங்கும் யுத்தம்., DK வின் ட்விட்டர் பதிவு!!

இவருக்கு பதிலாக ஷமார் புரூக்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதாக கிரிக்கெட் தலைமை நிர்வாகி ஜிம்மி ஆடம்ஸ் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் முக்கிய வீரரான ஷிம்ரன் ஹெட்மயர் உலக கோப்பையில் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here