முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்!முதல்வராக பதவி ஏற்றார் ஸ்டாலின்!!

0

தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.

தமிழக முதல்வர்:

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தமிழகத்தில் கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் சட்டப்பேரவை தேர்தல் மிக பாதுகாப்பாக நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் கடந்த மே மாதம் 2ம் தேதி வெளியானது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதில் திமுக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் 159 தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. மேலும் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்பு திமுக கூட்டணி ஆட்சியமைக்கவுள்ளது. தமிழகத்தில் 6வது முறையாக திமுக ஆட்சி அமைக்கவுள்ளது. மேலும் முதன்முறையாக திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ளார். தற்போது இவரது பதவி ஏற்கும் விழா கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

தமிழகத்தின் அடுத்த புதிய அமைச்சர்கள் – பட்டியல் வெளியீடு!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் மற்றும் தமிழகத்தின் புதிய அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டன. ஸ்டாலின்கு பதவி பிரமாணம் மற்றும் காப்பு பிரமாணத்தை தமிழக ஆளுநர் செய்து வைத்தார். தற்போது தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றுள்ளார். இவர் தமிழகத்தின் 23வது முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அமைச்சர்களுக்கும் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here