ஒபிஎஸ்ஸை நேரில் சந்தித்த ஸ்டாலின், சசிகலா..

0

இன்று காலை 5 மணிக்கு ஓபிஎஸ்ஸின் மனைவி திடீர்ன்னு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார். விஜயலக்ஷ்மி சில நாட்களாக சென்னை பெருங்குடி தனியார் மருத்துவ மனையில் அட்மிட் பண்ணிருந்தாங்க. இன்று காலை 5 மணி அளவில் ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் மருத்துவர்களால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை . அவங்க 6.45 போல இறந்துருக்காங்க. ஆனால் அவங்க இறந்ததை அதிகாரப்பூர்வமாக காலை 9.30 போல் தன சொல்லிருந்தாங்க. இந்த நிலையில் அவங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் சொல்லிருக்குறாங்க. நம்ம முதல்வர் மு.க .ஸ்டாலின் அமைச்சர் துரைமுருகன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு,மா.சுப்பிரமணியன்,உதயநிதி ஸ்டாலின் எல்லாருமே ஆறுதல் சொல்லிருக்காங்க. அப்பொழுது மு,க. ஸ்டாலின் கிட்ட ஓ.பன்னீர் செல்வம் கண்ணீர் விட்டு அழுத்துருக்கிறார். ஸ்டாலின் ஆறுதல் கூறி சமாதானம் செய்திருக்கிறார். அடுத்ததாக அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி எல்லாருமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிலையில் சசிகலாவும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்திருந்தாங்க. அப்பொழுது ஓபிஎஸ் கண் கலங்கி அவங்களோட கைய பிடிச்சு அழுத்துருக்காரு. சசிகலா ஆறுதல் சொல்லிருக்காங்க. இந்த செய்தி தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொல்லப்பட்டு வருகிறது. விஜயலட்சுமியின் உடல் தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு கொண்டு போறாங்க, செப் 2 நாளைக்கு அடக்கம் செய்வாங்கன்னு சொல்லறாங்க .

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here