தமிழகத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்?? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்!!

0

தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் இன்று மாலை தன் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டத்தை மேற்கொள்ளவுள்ளார். இதில் கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசிக்க படவுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சரவை கூட்டம்:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக நேற்று(மே 6)முதல் பல்வேறு கட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இருந்தும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக காணப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது இதனை குறித்து தமிழகத்தின் புதிய முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்கவுள்ளார். இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அதில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதால் இந்த கூட்டம் முக்கியமானவையாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here