திரைப்படமாகும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு – ஹீரோ யாருன்னு நீங்களே பாருங்க!!

0
திரைப்படமாகும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு - ஹீரோ யாருன்னு நீங்களே பாருங்க!!
திரைப்படமாகும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு - ஹீரோ யாருன்னு நீங்களே பாருங்க!!

தமிழகத்தின் தற்போதைய முதல்வரான மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு படமாக தயாராக உள்ளதாகவும், இந்தப் படத்தை பிரபல இயக்குனர் போஸ் வெங்கட் இயக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

 மு.க.ஸ்டாலின்:

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவடைய உள்ளது. தற்போது, சமீப காலமாக முன்னாள் முதல்வர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இயக்குனர் விஜய், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளை தலைவி என்ற பெயரில் படமாக்கினர். தற்போது, இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வந்துள்ளது.

இந்த படத்தை, இயக்க போஸ் வெங்கட் என்பவரும், இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில், ஸ்டாலின் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் சமுத்திரக்கனி கமிட்டாகியுள்ளாராம். இந்த படத்தில், ஸ்டாலின் மிசா சட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தது தொடங்கி, எப்படி கஷ்டப்பட்டு இந்த முதல்வர் நாற்காலிக்கு வந்தார் என்பதை விளக்கும் காட்சிகள் மையப்படுத்தப்படலாம் என பேசப்படுகிறது. விரைவில், இது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here