தமிழக சட்டமன்ற தேர்தல் – ஸ்டாலினின் 6ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் ரத்து!!

0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் 6ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் ரத்தாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆட்சி காலம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் மிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். மேலும் இவரது தேர்தல் அறிக்கையும் அனைவரும் கவரும் வண்ணத்தில் இருந்து வருகிறது. அதில் பெண்களுக்கு பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. வருகிற 12ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது வரை திமுக, மக்கள் நீதி மய்யம் அமமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்கள் இருப்பதால் ஸ்டாலின் தனது தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே தற்போது ஸ்டாலினின் 6ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் ரத்தாகியுள்ளது.

உத்திரகண்ட் முதல்வர் திடீர் ராஜினாமா – பின்னணியில் பாஜக உள்ளதா??

இவர் வருகிற 12 மற்றும் 13ம் தேதிகளில் சேலம், நாமக்கல், மதுரை, கரூர், திண்டுக்கல் ஆகிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தற்போது ரத்தாகியுள்ளது. மேலும் தேர்தல் நெருங்கி வருவதால் ஸ்டாலின் தற்போது தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here