முதல்வர் ஆன பின் ஸ்டாலின் நிறைவேற்ற போகும் முதல் வாக்குறுதி – ஆவலில் மக்கள்!!

0

தமிழக முதல்வர் பணியேற்றிய பின் மு.க ஸ்டாலின் கையெழுத்திட போகும் முதல் தேர்தல் வாக்குறுதி எது என்ற ஆர்வம் மக்களிடையே பெருகி வருகிறது

மு.க.ஸ்டாலின் 

10 ஆண்டிற்கு பிறகு தி.மு.க தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் 07-05-2021 அன்று பதவி ஏற்க உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க சாமானிய மக்களை கவரும் வகையில் பல வாக்குறுதிகளை தெரிவித்தது. தற்போது தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்ட மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்து நிறைவேற்ற போகும் முதல் வாக்குறுதி எது என்ற கேள்வி மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தி.மு.க தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 வழங்கப்படும், கொரோனா ஊரடங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 4000 உதவித்தொகை, பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், காஸ் சிலிண்டர்க்கு ரூபாய் 100 மானியம், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, 5 ரூபாய் வரை எரிபொருள் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகளை தெரிவித்தது.

பெண்களுக்கு முக்கியத்துவம்

தி.மு.க தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து அவர்களிடமிருந்து புகார் மனுக்களையும் பெற்று கொண்டார். அந்த புகார் மனுக்கள் தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்ற 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என உறுதி தெரிவித்தார். இதில் எந்த மனுவை நிறைவேற்றி மு.க.ஸ்டாலின் முதலில் கையெழுத்து இடுவர் என்பது மக்களிடையே பேரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா நோய்பரவல் எதிரொலி – தமிழகத்தில் காலை 8 மணிக்கு டாஸ்மாக் திறப்பு??

தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வாக்குறுதிகளான அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமை தொகை போன்ற திட்டங்களை ஸ்டாலின் அவர்கள் முதலில் கையெழுத்து இடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here