போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு அடித்த ஜாக்பாட் – 20,000 காலிப்பணியிடங்கள்! அரசு அறிவிப்பு!!

0
போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு அடித்த ஜாக்பாட் - 20,000 காலிப்பணியிடங்கள்! அரசு அறிவிப்பு!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு, 2022 க்கான முக்கிய அறிவிப்பை SSC தற்போது வெளியிட்டுள்ளது.

Staff Selection Commission தேர்வு:

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்தெடுத்து பணியமர்த்துகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 20,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், B பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிக்க டிகிரி முடித்து, 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் அவர்கள் Combined Graduate Level Examination போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதே போல் B பிரிவில், மத்திய புலனாய்வுத் துறை, ரயில்வே துறை, உதவி பிரிவு அலுவலர் பணியிடங்கள், மத்திய அரசின் தலைமைச் செயலகம் மற்றும் மத்திய அரசின் வருவாய் துறைகளிலும், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

EPFO சந்தாதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,,ஊதிய உச்சவரம்பு அதிகரிக்க வாய்ப்பு!!

இதனை தொடர்ந்து, C பிரிவு பணிகளுக்கு 12ஆம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் Combined Higher Secondary Level தேர்வு மூலம் மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here