ASIA CUP 2022 – நாகினி ஆட்டம் போட்டு சூடேற்றிய இலங்கை கிரிக்கெட் வீரர் – வங்க தேசம் செய்த தவறு என்ன?

0
ASIA CUP 2022 - நாகினி ஆட்டம் போட்டு சூடேற்றிய இலங்கை கிரிக்கெட் வீரர் - வங்க தேசம் செய்த தவறு என்ன?
ASIA CUP 2022 - நாகினி ஆட்டம் போட்டு சூடேற்றிய இலங்கை கிரிக்கெட் வீரர் - வங்க தேசம் செய்த தவறு என்ன?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை அணி, வெற்றி கொண்டாட்டத்தில் நாகினி குத்தாட்டம் போட்டு எதிரணியை வெறுப்பேற்றியுள்ளனர்.

வங்கதேசத்தை பழித்தீர்த்த இலங்கை!

ஆறு அணிகள் பங்கேற்றுள்ள 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு துபாயில் நடைபெற்ற 5 வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் களம் கண்டனர். இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். இந்நிலையில் இலங்கை அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது வங்கதேச பந்துவீச்சாளர் மெஹிதி ஹசன் வீசிய பந்தை, இலங்கை அணி வீரர்கள் 4 பவுண்டரி அடித்து ரன்கள் குவித்தனர். இதனால் இலங்கை அணி 19.2 ஓவர்களில் எட்டு விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடிய இலங்கை அணி வீரரான கருணாரத்னே நாகினி குத்தாட்டம் போட்டு வங்கதேச அணி வெறுப்பேற்றி உள்ளார். இதற்கு காரணம் போட்டி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு இலங்கை அணி கேப்டன், வங்கதேச அணியில் ஷகிபுல் ஹசனை தவிர வேறு எந்த பந்து வீச்சாளர்களும் இல்லை என கூறினார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக இலங்கை அணியில் பேட்ஸ்மேன்கள், பௌலர்கள் இல்லை என வங்கதேச அணியினர் கூறினர். இந்த சூழ்நிலையால் நேற்று நடைபெற்ற போட்டி மிகுந்த விறுவிறுப்பாகவும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்காகவும் அமைந்தது. மேலும் கடந்த ஆண்டு இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்ற போது பாம்பு போல் நடனமாடி வெறுப்பேற்றியுள்ளனர். இதற்கு பதிலடி தரும் விதமாக தான் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி வீரரும் டான்ஸ் ஆடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here