இவரை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும்.., அப்போ ரோஹித் நிலைமை என்ன?? BCCI எடுக்கும் அதிரடி முடிவு!!

0
இவரை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும்.., அப்போ ரோஹித் நிலைமை என்ன?? BCCI எடுக்கும் அதிரடி முடிவு!!
இவரை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும்.., அப்போ ரோஹித் நிலைமை என்ன?? BCCI எடுக்கும் அதிரடி முடிவு!!

இந்திய அணியின் வருங்கால கேப்டனாக இவரை தான் நியமிக்க வேண்டும் என வர்ணனையாளர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

ஸ்ரீகாந்த் பேட்டி

ICC சார்பில் நடைபெறும் டி20 உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை என இரு தொடர்களிலும் இந்தியா அணி அரையிறுதி வரை முன்னேறி பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டனர். இதனால் இந்திய அணி மீது பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் ரோகித் சர்மா தான் இந்திய அணியை சரியாக வழிநடத்த வில்லை என்றும் கூறி வருகின்றனர். இதனால் இனி வரும் போட்டிகளில் இவரை கேப்டனாக நியமிக்க கூடாது என விமர்சனம் செய்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் BCCI என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை இது ஒரு புறம் இருக்க மறுபுறம் வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக நம்பிக்கை நாயகன் கார்த்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த போட்டியில் மட்டும் தொடரை வென்று கொடுத்து விட்டால் இந்திய அணியின் நிரந்தர கேப்டனாகுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் வர்ணனையாளரான ஸ்ரீகாந்த் இனி வரும் போட்டிகளில் இந்திய அணியில் ஆல்ரவுண்டர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு பயிற்சி அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஏனென்றால் கடந்த 2011, 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு ஆல்ரவுண்டர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் முக்கிய காரணமாக இருந்தனர். எனவே இனி வரும் போட்டிகளில் சிறந்த ஆல்ரவுண்டர்களை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார். இது தவிர இந்திய அணிக்கு நிரந்தர கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here