Saturday, April 10, 2021

நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினம் – மகள் ஜான்வி கபூர் உருக்கமான பதிவு!!

Must Read

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினத்தை ஒட்டி அவரது மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர், தனது அம்மா தனக்காக கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி

1960களில் தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இந்திய சினிமாவுக்கு இவர் அளித்த பங்களிப்பு மிகப்பெரியதாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை ஸ்ரீதேவி. சிறந்த நடிப்புக்காக இவர் வாங்கிய விருதுகளும் ஏராளம். தமிழ் நடிகையான ஸ்ரீதேவி, பிரபல ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூர் என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த 2018ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு கலந்து கொள்ள சென்ற ஸ்ரீதேவி, எதிர்பாராத விதமாக மரணத்தை சந்திக்க நேர்ந்தது. இவரது திடீர் மரணம் திரையுலகிற்கு உண்டான பெரும் இழப்பாக கருதப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 20ம் தேதி, நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாளை ஒட்டி அவரது மகள் ஜான்வி கபூர் வலைதளத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி – வைரலாகும் விலை பட்டியல்!!

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, தனது அம்மா கைப்பட எழுதிக்கொடுத்த கடிதம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த கடிதத்தில், ‘நான் உன்னை நேசிக்கிறேன் labbu. இந்த உலகத்திலேயே நீதான் சிறந்த குழந்தை’ என எழுதப்பட்டிருந்தது. நடிகை ஜான்வி கபூர் இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, miss you என்று குறிப்பிட்டுள்ளார். ஜான்வியின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதலை தெரிவித்துவருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா?? கண்கலங்கிய ரசிகர்கள்!!

விஜய் டிவி வருடா வருடம் வழங்கி வரும் விஜய் டெலிவிஷன் அவார்ட் தற்போது நடந்து வருகிறது. அதற்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சித்ராவிற்கு கிடைத்த...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -